குருணாகல் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக முஸ்லிம் ஒருவர்

தமிழ் ​செய்திகள் இன்று


குருணாகல் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக முஸ்லிம் ஒருவர்

குருணாகல் வைத்தியசாலையின் பணிப்பாளராக புதிய ஒருவர் நியமிக்கப்பட்டதையடுத்து, வைத்தியசாலையில் இடம்பெற்று வந்த எதிர்ப்பு நடவடிக்கை முடிவுக்கு வந்துள்ளது.

குருநாகல் போதனா வைத்தியசாலையின் புதிய பதில் பணிப்பாளர் நியமிக்கப்பட்டமையோடு கூரையின் மேல் ஏறி ஐந்து தினங்களாக நடத்திவந்த எதிர்ப்பு போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

குருநாகல் போதனா வைத்தியசாலையின் புதிய பதில் பணிப்பாளராக வடமேல் மாகாண சுகாதாரப் பணிமனையின் பணிப்பாளராகக் கடமையாற்றிய வைத்திய அதிகாரி என். பரீத் சேவையைப் பொறுப்பேற்றுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குருநாகல் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராகக் கடமையாற்றிய வைத்தியர் வீரபண்டாரவுக்கு எதிராக முன் வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளை விசாரணை மேற்கொள்வதற்காக சுகாதார அமைச்சினால் அவருக்கு வழங்கப்பட்ட தற்காலிக இடமாற்றத்தை ஏற்றுக் கொள்ளாமல் உள்ள நிலையில் அந்தப் பதவிக்காக தற்காலிமாக இந்தப் புதிய பணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.