கொழும்பில் இரவில் வானில் தோன்றிய மர்ம பொருள் – இரகசிய வானூர்தியா?

தமிழ் ​செய்திகள் இன்று


கொழும்பில் இரவில் வானில் தோன்றிய மர்ம பொருள் – இரகசிய வானூர்தியா?

கொழும்பின் புறநகரான, ஹோமாகம பிரதேசத்தில் வானத்தில் பறக்கும் தட்டைப் போன்ற ஒன்றை அவதானிக்க முடிந்ததாக மருத்துவ மாணவர்கள் சிலர் கூறியுள்ளனர்.

நேற்று இரவு 07.30 மணியளவில் சுமார் 10 நிமிடங்கள் வரை இது அவதானிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிங்கள ஊடகம் ஒன்று இந்த செய்தியை வௌியிட்டுள்ளது.

ஹோமாகமை – பிட்டிபன பிரதேசத்தில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள சுமார் 10 மருத்துவ மாணவர்கள் கடந்த 4ஆம் திகதி இரவு 7.30 அளவில் இந்த வானூர்தி பறப்பதை தெளிவாக அவதானித்துள்ளனர்.

சிகப்பு நிறமான இந்த வானூர்தி வித்தியாசமான ஒளியுடன் பறந்துச் சென்றதாகவும், அது தட்டு வடிவத்தில் இருந்ததை தெளிவாக காணக் கூடியதாக இருந்தது எனவும் குறித்த மாணவர்கள் கூறியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அந்த வானூர்தியானது சுமார் 10 விநாடிகள் ஒரே இடத்தில் அசையாமல் காணப்பட்டதாகவும், அது செய்மதி போன்றது, சாதாரணமான வானூர்தி அல்ல எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சிறிது நேரம் ஒரே இடத்தில் காணப்பட்ட அந்த வானூர்தி பின்னர் வடகிழக்கு திசையில் பறந்து சென்றது எனவும் மாணவர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தட்டு போன்ற வடிவம் கொண்ட இந்த வானூர்தி வேற்றுக்கிரகத்தில் இருந்து வந்த வானூர்தியாக இருக்கலாம் எனவும் அவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.