சஜித் பிரேமதாஸவின் முக்கிய கூட்டம் – பல தீர்மானங்கள்

தமிழ் ​செய்திகள் இன்று


சஜித் பிரேமதாஸவின் முக்கிய கூட்டம் – பல தீர்மானங்கள்

சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுத் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் 10ம் திகதியில் இருந்து ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்காக வருகின்ற 10ஆம் திகதி சஜித் பிரேமதாஸ தலைமையில் விசேட கூட்டம் நடத்தப்படவுள்ளதோடு இதில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்த வேட்பாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

தேர்தல் பிரசார செயற்பாடுகளுக்காக இதுவரை 15000 குழுக்களை நியமித்திருப்பதாகவும் இன்னும் பல குழுக்களை நிறுவவுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியினர் தெரிவிக்கின்றனர்.

மேற்படி 10ஆம் திகதி நடத்தப்படும் கூட்டத்தில் 291 பேர் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை நாளை மறுநாள் திங்கட்கிழமை தேர்தல் திகதி குறித்து முடிவு செய்ய ஆணைக்குழு கூடுகிறது.

எவ்வாறாயினும் எதிர்வரும் 20ம் திகதி நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பொதுத்தேர்தல், பிற்போடப்பட்டுள்ள நிலையில் இதுவரை தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படவில்லை.