தர்காநகர் சிறுவன் தாக்கப்ட்ட சம்பவம் – பொலிஸார் தேவையான அதிகாரத்தையே பயன்படுத்தியுள்ளனர்

தமிழ் ​செய்திகள் இன்று


தர்காநகர் சிறுவன் தாக்கப்ட்ட சம்பவம் – பொலிஸார் தேவையான அதிகாரத்தையே பயன்படுத்தியுள்ளனர்

தர்காநகர் சிறுவன் தாரிக் விடயத்தில் பொலிஸார் தேவையான அதிகார பலத்தையே பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் கூடுதல் பலப் பிரயோகம் செய்யவில்லை என்றும், சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதை பொலிஸார் அறிந்திருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் களுத்துறை பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையில் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.

பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் பணிப்புரையின் படி சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பொலிஸார் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதை அறியாத பொலிஸார், போதைப் பொருள் பயன்படுத்தும் நபர் என்ற சந்தேகத்தில் சற்று கடினமாக நடந்து கொண்டுள்ளதாக ஆரம்ப விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் பொலிஸார் கடமை தவறியுள்ளனரா என்பது தொடர்பில் ஆராய பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் பணிப்புரைப்படி, பெண்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோக தடுப்பு பிரிவின் அத்தியட்சகரால் மற்றொரு விசாரணை இடம்பெறுகின்றது.