தொண்டமானின் தலைவர் பதவி யாருக்கு?

தமிழ் ​செய்திகள் இன்று


தொண்டமானின் தலைவர் பதவி யாருக்கு?

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் அடுத்த தலைவர் யார் என்பது தொடர்பில் பொதுத் தேர்தலின் பின்னர் தீர்மானிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் இதனைக் கூறினார்.

இப்போதைய நிலையில், தொழிலாளர் காங்கிரசின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முத்து சிவலிங்கம் உட்பட 08 பேர் கொண்ட குழு நிர்வகித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவால், நுவரெலியா மாவட்ட வேட்புமனுவில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு அவரது புதல்வன் ஜீவன் தொண்டமானை பரிந்துரைக்கும் ஆவணம், தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படவுள்ளது.

குறித்த ஆவணத்தை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி இன்று கையளிக்கவுள்ளது.