நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த மூன்று பேர்

தமிழ் ​செய்திகள் இன்று


நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த மூன்று பேர்

மடுல்சீமை பிரதேசத்தில் நீராடிக் கொண்டிருந்த மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

தந்தை (38), மகள் (12) மற்றும் ஒரு பெண் (13) ஆகிய மூன்று பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

பதுளை – மடுல்சீமை , கெரண்டிஎல்ல பகுதியில் உள்ள நீர்நிலை ஒன்றில் நீராடச் சென்ற மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சடலங்கள் பசறை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு மரண விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.

மடுல்சீமை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.