மேல் மாகாணத்தில் திங்கட்கிழமை முதல் கடுமையாக அமுலாகும் சட்டங்கள்

தமிழ் ​செய்திகள் இன்று


மேல் மாகாணத்தில் திங்கட்கிழமை முதல் கடுமையாக அமுலாகும் சட்டங்கள்

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மேல் மாகாணத்தில் போக்குவரத்து சட்டங்கள் மீண்டும் வழமைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்த சட்டங்கள் மீண்டும் நமைுறைக்கு வருகின்றன.

இதனடிப்படையில் பேருந்துகளுக்கு பிரதான முன்னுரிமை வழித்தட முறைமையானது மொறட்டுவையில் இருந்து புறக்கோட்டை வரை அமுல்படுத்தப்படும் என பொலிஸ் போக்குவரத்து பிரிவு கூறியுள்ளது.

இந்த நடைமுறை சரியான முறையில் பின்பற்றபடுகிறதா என்பதை கண்காணிக்க போக்குவரத்து பொலிஸாருக்கு மேலதிகமாக மேலும் 500 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

கடந்த காலங்களில் நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில், மீண்டும் நாடு வழமைக்கு திரும்பியதையடுத்து இந்நடவடிக்கை பின்பற்றப்பட உள்ளது.