சேலை அழகு என்பதற்காக அழகுராணி ஆக முடியாது

தமிழ் ​செய்திகள் இன்று


சேலை அழகு என்பதற்காக அழகுராணி ஆக முடியாது

சேலை அழகாக உள்ளது என்பதற்காக அழகுராணிப் போட்டியில் வெற்றிபெற முடியாது என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

எனவே தேர்தல் குறித்து கூடிய அவதானம் செலுத்தி செயற்பட வேண்டும் என ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் கொள்ளுப்பிட்டிய இல்லத்தில் இடம்பெற்ற கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்து கூறியுள்ள அவர்,

தள்ளுப்படி செய்யப்பட்ட மனுக்கள் ஐக்கிய தேசிய கட்சி தாக்கல் செய்தவையாகவே மக்கள் கருதுகின்றனர். எனவே மக்கள் மத்தியில் உண்மை நிலையினை கொண்டுச்செல்ல வேண்டும் என தெரிவித்தார்.

அதே போன்று ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவிப்பு காலாவதியாகியுள்ளது. அரசியலமைப்பை மீறாது பாதுகாக்க வேண்டுமாயின், பாராளுமன்ற அமர்வை ஆகஸ்ட் வரை ஒத்தி வைத்து தேர்தலுக்கு செல்ல வேண்டும்.

எவ்வாறாயினும் பாராளுமன்றம் மீண்டும் கூடும் திகதியை ஜனாதிபதி அறிவித்தேயாக வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஐ.தே.க மாத்திரமல்ல தேர்தலை ஒத்திவைக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி என்பன கூட நீதிமன்றம் செல்ல வில்லை. ஏனெனில் அரசியல் கட்சி என்ற வகையில் எம்மால் தேர்தலை ஒத்திவைக்குமாறு நீதிமன்றம் செல்ல இயலாது.

ஆகவே தேர்தல் குறித்து அவதானத்தில் கொண்டு நாம் செயற்பட வேண்டும். கட்சி என்ற ரீதியில் எமக்குள்ள பொறுப்புகளை தேர்தல் வெற்றிக்காக முழு அளவில் செயற்படுத்த வேண்டும்.