தமிழர்கள் புலம்புவதில் பயனில்லை – வடக்கு, கிழக்கு பௌத்த பூமி

தமிழ் ​செய்திகள் இன்று


தமிழர்கள் புலம்புவதில் பயனில்லை – வடக்கு, கிழக்கு பௌத்த பூமி

வடக்கு, கிழக்கு பௌத்தர்களின் பூமி, தமிழர்கள் புலம்புவதில் பயனில்லை. இவ்வாறு கூறியுள்ளார் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர்.

தமிழர்கள் இதை உணர்ந்துகொள்ள வேண்டும். அவர்கள் புலம்பிக் கொண்டிருப்பதில் பயனில்லை.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியை நாம் வரவேற்கின்றோம். பெரும்பான்மை சிங்கள பௌத்தர்களின் வாக்குகளாலேயே அவர் நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

இந்நிலையில் அவரின் ஆட்சியை விமர்சிப்பதற்கு தமிழர்களுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை.

ஆகவே தமிழர்கள் எமது கொள்கைகளை ஏற்று எம்முடன் இணைந்து வாழ பயணிக்கலாம் என்று ஞானசார தேரர் கூறியுள்ளார்.