அனுஷா சந்திரசேகரன் கட்சியில் இருந்து நீக்கம்

தமிழ் ​செய்திகள் இன்று


அனுஷா சந்திரசேகரன் கட்சியில் இருந்து நீக்கம்

அனுஷா சந்திரசேகரனை கட்சியில் இருந்து நீக்குவதற்கு மலையக மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளது.

மலையக மக்கள் முன்னணியில் விஷேட கூட்டம் இன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அவர் சுயநலமாக செயற்படுவதாகவும், இதன்காரணமாக அவரை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாகவும், மலையக மக்கள் முன்னணி கூறியுள்ளது.

அனுஷா சந்திரசேகரன் வகித்த பிரதி செயலாளர் நாயகம் பதவி அந்தக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்பட உள்ளது.

இக்கலந்துரையாடலில் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. ராதாகிருஷ்ணன் உட்பட முன்னணியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டார்.