இலங்கையில் வானத்தில் தென்பட்ட அதிசய உயிரினம்

தமிழ் ​செய்திகள் இன்று


இலங்கையில் வானத்தில் தென்பட்ட அதிசய உயிரினம்

இலங்கையின் பல பிரதேசங்களில் வானத்தில் தௌிவாக அடையாளம் காண முடியாத உயிரினம் ஒன்று தென்பட்டதாக தெரிய வந்துள்ளது.

இது சம்பந்தமான வீடியோ ஒன்றும் கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் துறை பேராசிரியர் சந்தன ஜயரத்ன இதனைக் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் இது எந்த வகை உயிரினம் என்பது குறித்து இதுவரை அடையாளம் காணப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹம்பாந்தொடை மற்றும் திருகோணமலை உட்பட பல பிரதேசங்களில் குறித்த உயிரினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது குறித்து ஆய்வு செய்து வருவதாக கொழும்பு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.