ஈஸ்டர் தாக்குதல் – தெஹிவளை தேவாலயத்தின் ஆயர் வழங்கியுள்ள சாட்சியம்

தமிழ் ​செய்திகள் இன்று


ஈஸ்டர் தாக்குதல் – தெஹிவளை தேவாலயத்தின் ஆயர் வழங்கியுள்ள சாட்சியம்

ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்திற்கு முன்னதாக தெகிவளை, சென் மெரீஸ் தேவாலயத்தின் பாதுகாப்பு தொடர்பாக தெகிவளை பொலிஸ் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக கூறப்படுவதை தேவாலயத்தின் பங்குத்தந்தை மறுத்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக நேற்று இடம்பெற்ற ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையில் சாட்சியமளிக்கும் போதே அவர் இதனை மறுத்துள்ளார்.

ஏற்கனவே ஆணைக்குழு முன் சாட்சியமளித்த கல்கிஸ்ஸையின் அப்போதைய சிரேஸ்ட காவல்துறை அதிபர் முதித்த புஷல்லா, உயிர்த்த ஞாயிறுத்தாக்குதலுக்கு முன்னர் ஒரு தினத்தில் தேவாலயத்தில் பாதுகாப்பு தொடர்பான கூட்டம் நடத்தப்பட்டதாக தெரிவித்திருந்தார்.

எனினும் நேற்று சாட்சியமளித்த தேவாலயத்தின் பங்கு தந்தை தயா வெலிகடராச்சி, தாக்குதலுக்கு முன்னதாக கூட்டம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டமை பொய்யான தகவல் என்று குறிப்பிட்டார்.

இது உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் குறித்து முன்னதாகவே தாம் அறிந்திருந்ததாக சமூகத்தின் மத்தியில் செய்தி ஒன்று பரவுவதற்கு காரணமாக இருந்துவிட்டது என்று குறிப்பிட்டார்.

எனினும் 2019 ஏப்ரலில் 14ம் திகதியில் இருந்து 21ம் திகதி வரை தெஹிவளை காவல்துறையினர் தமது தேவாலயத்துக்கு போக்குவரத்து நெரிசல் உட்பட்ட காரணங்களின் அடிப்படையில் பாதுகாப்பு வழங்கினர் என்று தெஹிவளை சென்மேரீஸ் தேவாலய பங்கு தந்தை சாட்சியமளிதார்.