கஞ்சிப்பான இம்ரானுடன் தொலைபேசியில் உரையாடியவர்கள் யார்?

தமிழ் ​செய்திகள் இன்று


கஞ்சிப்பான இம்ரானுடன் தொலைபேசியில் உரையாடியவர்கள் யார்?

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல பாதாள உலகு குழு உறுப்பனரான கஞ்சிப்பான இம்ரானிடமிருந்து தொலைபேசி உள்ளிட்ட சில பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

விஷேட அதிரடிப்படையின் பொலிஸாரால் இவை மீட்கப்பட்டுள்ளன.

பூசா சிறைச்சாலையில் உள்ள கைதியான கஞ்சிப்பான இம்ரானின் சிறைக்கூடத்தில் இருந்து இரண்டு கைத்தொலைபேசிகள், இரண்டு சிம் கார்ட்டுகள், சார்ஜர்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

ஸ்மார்ட் போன்கள் , ஹேண்ட் ப்ரீ சாதனம் என்பவை உட்பட்ட இந்த பொருட்கள் கூரைக்குள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

இந்த தொலைபேசிகளில் இருந்து எடுக்கப்பட்ட அழைப்புகள் குறித்தும் அதற்கு உள்வந்த தொலைபேசி அழைப்புகள் குறித்தும் தனி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.