கருணா அம்மான் பொய் கூறுகிறார் – அவரது முன்னாள் சகா

தமிழ் ​செய்திகள் இன்று


கருணா அம்மான் பொய் கூறுகிறார் – அவரது முன்னாள் சகா

தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணி கட்சியான கருணா அம்மானின் கட்சியில் இருந்து நானாகவே விலகி ஸ்ரீ லங்கா பெரமுனை கட்சியில் வேட்பாளராக களமிறங்கியுள்ளேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெயானந்தமூர்த்தி தெரிவித்தார்.

தன்மீது கருணா அம்மான் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டு தெரிவித்துவருவது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்

கருணா அம்மான் நான் அவரது கட்சியில் இருந்து திருட்டுத்தனமாக வெளியேறியுள்ளதாகவும் அவரது கட்சியின் பெயரை பயன்படுத்தி பிரச்சாரம், செய்துவருவதாக உண்மைக்கு புறம்பாக குற்றம் சுமத்தி வருகின்றார்

உண்மையில் நடக்க இருக்கும் பாராளுமன்ற வேட்பாளர்களின் பங்கீட்டின் காரணமாகவே நான் அக் கட்சியில் இருந்து வெளியேறினேன்.

அதேவேளை அந்த கட்சியின் பெயரை பயன்படுத்தி நான் எந்த பிரச்சாரமும் செய்யவில்லை அதேவேளை, என் மீது வீண் குற்றச்சாட்டு சுமத்திவருவது ஒரு பெருத்தமில்லாத அரசியல் நாகரிகமில்லாத செயல்.

நான் ஒரு தேசிய கட்சியான ஸ்ரீ லங்கா பெரமுனை கட்சியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தனி தமிழர்கள் மாத்திரம் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியுள்ளோம்.

தேசிய கட்சியில் தனித்த தமிழர்கள் மாத்திரம் போட்டியிடுகின்றோம் என்பது இது ஒரு வரலாறு. எனவே மக்கள் நன்கு உணர்ந்து நிதானமாக செயற்படவேண்டும்

உண்மையாக கிழக்கில் தமிழர்களின் பூர்வீக நிலங்களை தொல்லியல் என்ற பெயரில் அபகரிக்க நாங்கள் ஒருபோதும் அனுமதியோம்.

அதேவேளை அவர்கள் அப்படி செய்ய மாட்டர்கள் என நினைக்கின்றேன் அவ்வாறு நடந்தால் நாங்கள் ஜனாதிபதியுடன் பேசி அதற்கான தீர்வை பெறுவோம் என்றார்.