சஜித் பிரேமதாஸ அனைத்து தேர்தல்களிலும் தோல்வி

தமிழ் ​செய்திகள் இன்று


சஜித் பிரேமதாஸ அனைத்து தேர்தல்களிலும் தோல்வி

ஐக்கிய தேசிய கட்சியின் பிரிவினைக்கு சஜித் பிரேமதாஸவே பொறுப்புக் கூற வேண்டும் என்று பொதுஜன பெரமுனவின் ஹம்பாந்தோட்டை மாவட்ட பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

றத்மலானை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் உரையாற்றும் ​போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஹம்பாந்தோட்டை மாவட்ட வேட்பாளராக சஜித் பிரேமதாஸ களமிறங்கும் போது தான் சந்தோஷப்படுவதாக கூறிய நாமல் ராஜபக்ஷ, சஜித் பிரேமதாஸ எப்போதும் தன்னிடம் தோல்வியடைந்ததாகவும் கூறினார்.

சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராகவும் ஹம்பாந்தோட்டையில் தோல்வியடைந்ததாகவும் அவர் கூறினார்.

தற்போது அவர் உருவாக்கி இருப்பது புதிய கட்சி அல்ல என்றும் ஒரு குழுவையே இணைத்துக் கொண்டுள்ளதாகவும் கூறினார்.

தற்போது ஐக்கிய தேசிய கட்சி பிளவடைந்து மிகவும் கீழ் மட்டத்திற்கு விழுந்துள்ளதாகவும், அதற்கு முழுப் பொறுப்புக் கூற வேண்டியவர் சஜித் பிரேதாஸவே என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கூறினார்.