பொதுப் போக்குவரத்து தொடர்பில் சற்றுமுன்னர் வௌியான முக்கிய அறிவிப்பு

தமிழ் ​செய்திகள் இன்று


பொதுப் போக்குவரத்து தொடர்பில் சற்றுமுன்னர் வௌியான முக்கிய அறிவிப்பு

நாடு முழுவதும் போக்குவரத்து சேவயை வழமைக்கு கொண்டு வருவது சம்பந்தமான இறுதி தீர்மானம் நாளை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து சேவைகள் முகாமைத்து அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

நாளையதினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இடம்பெற உள்ள சந்திப்பின் பின்னர் இறுதித் தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர கூறினார்.

முன்னதாக நாளை (08) முதல் போக்குவரத்து சேவையை நாடு முழுவதும் வழமை போன்று நடத்திச் செல்வதற்கு போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சு தீர்மானித்திருந்தது.

இந்நிலையில் இந்த அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

நாளைய தினம் ஜனாதிபதியுடன் இடம்பெற உள்ள சந்திப்பின் போது துறை சார்ந்தவர்களும் கலந்து கொள்ள உள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாளை (08) திங்கட்கிழமை முதல் முன்னர் இருந்தது போது போக்குவரத்து சேவையை நாடு முழுவதும் வழமைக்கு கொண்டுவருவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இந்த அறிவிப்பு வௌியாகியுள்ளது.