பயங்கரவாத தாக்குதலுடன் முஸ்லிம்களை சம்பந்தப்படுத்தக் கூடாது

தமிழ் ​செய்திகள் இன்று


பயங்கரவாத தாக்குதலுடன் முஸ்லிம்களை சம்பந்தப்படுத்தக் கூடாது

பயங்கரவாதத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு ஒருபோதும் மதவாத மோதல் ஏற்பட முடியாது என்று ஓமல்பே சோபித தேரர் கூறியுள்ளார்.

மதத்தை முன்னிறுத்தி சஹ்ரான் உள்ளிட்ட பயங்கரவாத குழுவினரால் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு முஸ்லிம்களை சம்பந்தப்படுத்தக் கூடாது என்று ஓமல்பே சோபித தேரர் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு எதிராக முஸ்லிம்களே கிளர்ந்தெழுந்ததை தாம் அவதானித்ததாக அவர் கூறியுள்ளார்.

உண்மைத்தன்மையைும் நியாயத் தன்மையையும் அடிப்படையாக வைத்து சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமே தவிர மதத்தை வைத்துி அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

ஒரு இனத்தவர்களை ஒரு விதமாகவும் மற்றொரு இன சமூகத்தை இன்னொரு விதமாகவும், உறவினர்கள், நெருங்கியவர்களுக்கு இன்னொரு விதமாகவும் சட்டத்தை அமுல்படுத்த முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.