பாடசாலை மாணவர்கள் தொடர்பில் கல்வியமைச்சு வௌியிட்டுள்ள செய்தி

தமிழ் ​செய்திகள் இன்று


பாடசாலை மாணவர்கள் தொடர்பில் கல்வியமைச்சு வௌியிட்டுள்ள செய்தி

பாடசாலை மாணவர்கள் அனைவருக்கும் சுகாதார பாதுகாப்புக்கான சுரக்ஷா சுகாதார பாதுகாப்பு காப்புறுதி திட்டம் தொடர்ந்தும் அமுல்படுத்தப்படும் என்று கல்வியமைச்சு கூறியுள்ளது.

கல்வியமைச்சு இன்று வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

இதற்கமைய இதுவரையில் காப்புறுதிக்காக விண்ணப்பிக்காதவர்கள், முழுமையான தகவல்கள் அடங்கிய விண்ணப்பங்களை அந்த பகுதியிலுள்ள வலயகல்வி பணிமனை அல்லது கல்வி அமைச்சுக்கு அனுப்புமாறும் கோரப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்களுக்காக 011 2784 164, 011 2784 872 அல்லது 011 364 1555 என்ற இலக்கங்களுக்கு அழைப்பு ஏற்படுத்த முடியுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.