பாராளுமன்ற தேர்தலை நடத்த முடியுமா? மஹிந்த தேஷப்பிரியவின் விளக்கம்

தமிழ் ​செய்திகள் இன்று


பாராளுமன்ற தேர்தலை நடத்த முடியுமா? மஹிந்த தேஷப்பிரியவின் விளக்கம்

சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தலின் படி பாரளுமன்ற தேர்தலை நடத்த முடியுமா என்பது சம்பந்தமான ஒத்திகை நிகழ்வு இன்று இடம்பெற்றது.

இந்த ஒத்திகை நிகழ்வு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய கூறியுள்ளார்.

அதன்படி சுகாதாரத்துறை வழங்கிய நெறிமுறைகளை அமுல்படுத்தி பொதுத் தேர்தலை நடத்த முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கமைய இன்று இடம்பெற்ற பொதுத் தேர்தலுக்கான ஒத்திகை நடவடிக்கைகள் வெற்றிகரகமாக நிறைவடைந்ததாக தேர்தல்கள் ஆணையகத்தின் தலைவர் மஹிந்த தேசப்ரிய தெரிவித்துள்ளார்.

குறித்த ஒத்திகை நடவடிக்கைகள் இன்று காலை 10 மணியளவில் ஹம்பலாங்கொடை பகுதியில் இடம்பெற்றதது.