​பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெறும்

தமிழ் ​செய்திகள் இன்று


​பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெறும்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெறறும் என்று முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா கூறியுள்ளார்.

அந்த வெற்றியில் முஸ்லிம்கள் பங்காளிகளாக இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

முஸ்லிம்களுக்கு எதிரான அனைத்து இன வன்முறை சம்பவங்களின் போதும் அதற்கான நடவடிக்கைகளை எடுத்தது அன்றைய சுதந்திர கட்சியும், தற்போதைய பொதுஜன பெரமுனவும் தான் என்று அவர் கூறியுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சிறுபான்மை சமூகத்தின், குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் நண்பராக இருந்து வந்துள்ளார் என்றும் பைசர் முஸ்தபா குறிப்பிட்டுள்ளார்.

இந்த வெற்றியில் முஸ்லிம் சமூகம் பங்காளியாக இருந்து, பெரும்பான்மை சமூகத்தின் நம்பிக்கையை பெற வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா கூறியுள்ளார்.