இன்று முதல் கண்காணிப்பு செய்வதற்கு 100 பேர்

தமிழ் ​செய்திகள் இன்று


இன்று முதல் கண்காணிப்பு செய்வதற்கு 100 பேர்

தேர்தலுக்கு முன்னரான காலப்பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக சுமார் 100 கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இன்று (08) முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவால் தேர்தல் தினம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர், மற்றுமொரு பகுதியினர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என, அதன் இணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் தேர்தலுக்கான திகதி இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பதுடன், தேர்தல் தினம் தொடர்பில் தீர்மானிக்கும் முக்கிய கூட்டம் ஒன்று இன்று இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.