ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தில் பதற்றநிலை

தமிழ் ​செய்திகள் இன்று


ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தில் பதற்றநிலை

சிறிகொத்தவில் அமைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தில் தற்போது பதற்றநிலை ஏ்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தொழிற்சங்கங்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்தநிலை தோன்றியதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்றைய இந்த கலந்துரையாடல் இடம்பெறுகின்றது.

பொதுத் தேர்தல் மற்றும் கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்து தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெளிவுப்படுத்தியதன் பின்னரே இந்த அமையின்மை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து ரணில் விக்கிரமசிங்க கூட்டத்திலிருந்து வெளியேறி விட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.