கிழக்கின் தனித்துவம் காவுகொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கைக்கும் துணைபோக முடியாது

தமிழ் ​செய்திகள் இன்று


கிழக்கின் தனித்துவம் காவுகொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கைக்கும் துணைபோக முடியாது

கிழக்கின் தனித்துவம் காவுகொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கைகளுக்கும் நாம் துணை போக முடியாது. இதற்கான செயற்பாடுகள் எத்தகைய வடிவில் வந்தாலும் நாம் அதற்காக துணிந்து குரல்கொடுப்போம் என உறுதிபடத் தெரிவிக்கின்றார் கிழக்கு மாகாண முன்னாள்
முதலமைச்சரும் ஸ்ரீல. முஸ்லிம் காங்கிரஸின் மட்டு. மாவட்ட வேட்பாளருமான ஹாபிஸ் நஸிர் அஹமட்.

இதுவிடயம் தொடர்பில் அவரது செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது:-

தற்போதைய நிலையில் தொல்பொருள் வரலாற்று சிறப்பிடங்கள் என்கின்ற அம்சம்
முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதற்காக கிழக்கிலங்கையில் அவசர அவசரமாகத் தொல்பொருள் மரபுரிமையை முகாமைத்துவம் செய்வதற்காக ஜனாதிபதியால் 11பேர் கொண்ட செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.

இது கிழக்கு வாழ் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் 375 பகுதிகள் ஏற்கனவே தொல்பொருள் திணைக்களத்தால் வரலாற்றுச்
சிறப்பிடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

இதில் கிழக்கு மாகாணத் தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 28 பௌத்த விகாரைகள் உட்பட 55 இடங்களும் அம்பாறையில் 246 இடங்களும் திருகோணமலையில் 74 இடங்களும் அடங்குகின்றன.

இந்த அடையாளப்படுத்தல் என்பது கிழக்கின் தனித்துவத்தை காவுகொள்ளும் முயற்சியின்
வெளிப்பாடாகவே மக்களால் நோக்கப்படுகின்றது. இன்று நாடு கொரோனா கோரப்பிடிக்குள்
சிக்குண்டு – பொருளாதாரம் அதல பாதளத்தில் விழ்ந்துள்ள நிலையில் மக்களின் இயல்பு
வாழ்க்கை பெரும் கேள்விக்குரிய ஒன்றாக மாறியுள்ளது.

இந்நிலையில் மிக அத்தியாவசியமான விடயங்களில் கவனம் செலுத்த வேண்டிய நாட்டின் தலைமைரூபவ் இனங்களுக்கிடையில் நல்லி ணக்கத்தை சிதைக்கும் இதுபோன்ற விடயத்தில் மிக அவசரம் காட்டும்தேவை என்ன என்பதே
மக்களின் கேள்வியாகும்.

பாதுகாப்பான நாடு- சட்டத்தை மதிக்கும் சமூகம் ஒன்றைக் கட்டியெழுப்புதல் என்ற முறைமையில் ஏற்கனவே 13பேர் கொண்ட செயலணி ஒன்றை ஜனாதிபதி நியமித் திருந்த நிலையில் இப்போது சிறுபான்மையைச் சமூகங்களைச் சேர்ந்த எவரையும் உள்வாங்காத இந்த 11பேர் கொண்ட செயலணி நியமிக்கப்பட்டு இரண்டுக்கும் ஒருவரைத் தலைவராகச் செயற்பட செய்திருப்பது மேலும் சந்தேகங்களை எழுப்பவே செய்திருக்கின்றன.

இவை ஒருபுறமிருக்க பௌத்த தேரர்களில் முக்கியமானவராகக் கருதப்படும் ஞானசார தேரர் வடக்கு – கிழக்கு சிங்கள மக்களின் பூமி என்கிறார். இத்தகைய கருத்து பகிர்வுகளையும்
செயற்பாடுகளையும் பார்க்கும்போது சிறுபான்மை மக்கள் மத்தியில் அச்சம் எழுவது
தவிர்க்கமுடியாத ஒன்றே, எனினும் நாம் எதற்கும் அஞ்சவேண்டிய தேவை இல்லை.


ஒற்றுமையென்னும் கயிற்றை பற்றிபிடிப்பதன் மூலம் நாம் இவற்றுக்கெல்லாம் தீர்வு காணலாம். எந்தவொரு காரணம் கொண்டும் கிழக்கு காவுகொள்ளப்படும் மறைமுக நடவடிக் கைகள் எதனையும் ஸ்ரீல.முஸ்லிம் காங்கிரஸ் கைகட்டி பார்த்துக்கொண்டிருக்காது என்பதை நான் உறுதிபடத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

இவ்விடயம் குறித்து நாம் அதிக கவனம் கொண்டு செயற்பட்டு வருகின்றோம் எனவே எமது
சக்தியைப் பலப்படுத்துவதன்