கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணப் பெட்டியை கொள்ளையிட்டது வைத்தியரா?

தமிழ் ​செய்திகள் இன்று


கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணப் பெட்டியை கொள்ளையிட்டது வைத்தியரா?

கொழும்பு தேசிய மருத்துவமனையின் பணப் பெட்டியினை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட நபர் ஒரு வைத்தியர் என்பது விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சொந்தமான பணத்தை இனந்தெரியாத நபர்கள் கொள்ளையிட்டுள்ளதாக இன்று காலை தகவல் வெளியாகயது.

வைத்தியசாலை ஊழியர்களின் மேலதிக நேர கொடுப்பனவினை வழங்குவதற்கு கொண்டு வரப்பட்ட பணமே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கொள்ளை சம்பவம் தொடர்பில் சந்தேக நபர், மருதானை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.

இந்நிலையில் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் வைத்தியர் என்று தகவல் வௌியாகியுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மருதானை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.