சுகாதார ஊழியர்களுக்கு ஜனாதிபதி வழங்கும் வெகுமானம்

தமிழ் ​செய்திகள் இன்று


சுகாதார ஊழியர்களுக்கு ஜனாதிபதி வழங்கும் வெகுமானம்

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தங்களை அர்ப்பணித்த சுகாதார துறை சார்ந்த ஊழியர்களை இரண்டு நாட்களுக்கு ஆடம்பர விடுதிகளில் குடும்பத்தாருடன் தங்குவதற்கு ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

சுகாதார துறையின் வைத்தியர்களில் இருந்து சாதாரண ஊழியர்கள் வரையில் தமது கடமைக்கு ஏற்ப இந்த வாய்ப்பை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.