தனக்கு எவரும் வாக்களிக்க வேண்டாம் – மங்கள சமரவீர கோரிக்கை

தமிழ் ​செய்திகள் இன்று


தனக்கு எவரும் வாக்களிக்க வேண்டாம் – மங்கள சமரவீர கோரிக்கை

ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தறை மாவட்டத்தின் சார்ப்பில் வேட்புமனு தாக்கல் செய்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர எதிர்வரும் தேர்தலில் போட்டியிட போவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கம் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ள நிலையில் அவருக்கு மாத்தறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி ஊடாக விருப்பு இலக்கம் 8 வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் வௌியிட்டுள்ள அறிக்கையில்,

இம்முறை பாராளுமன்ற தேர்தல் போட்டியில் இருந்து நான் விலகுகிறேன் .

எனவே தேர்தலில் எனக்கு வாக்களிக்க வேண்டாமென நான் எனது ஆதரவாளர்களிடம் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன்.

நாட்டின் தற்போதைய நிலைமையினை கருத்திற்கொண்டு இந்த முடிவை நான் எடுத்துள்ளேன்.

அது அரசியலில் இருந்து நான் முற்றாக ஒதுங்கியதாக அர்த்தமில்லை.இதுவரை காலம் எனக்கு வாக்களித்து ஆதரவளித்த மக்களுக்கு நன்றி.

உங்களுடன் நான் இருப்பேன்.”

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர மாத்தறையில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் தெரிவிப்பு