பல்கலைக்கழகத்துக்கு தெரிவான இரட்டைச் சகோதரர்கள்- ஒருவருக்கு ஏற்பட்ட சோக சம்பவம்

தமிழ் ​செய்திகள் இன்று


பல்கலைக்கழகத்துக்கு தெரிவான இரட்டைச் சகோதரர்கள்- ஒருவருக்கு ஏற்பட்ட சோக சம்பவம்

கடந்தாண்டு இடம்பெற்ற க.பொ.தர உயர்தர பரீட்சையில் விஞ்ஞான பிரிவில் கேகாலை மாவட்டத்தில் 4ஆம், 5ஆம் இடங்களை பெற்று பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பை பெற்றுக்கொண்ட இரட்டைச் சகோதரர்கள் தொடர்பில் முழு நாடும் அவதானம் செலுத்தியுள்ளது.

ருசிரு தேஷான் மனதுங்க மற்றும் இசுரு ஹெஷான் மனதுங்க ஆகிய இருவரில் ஒருவர் இன்று உயிரிழந்துள்ள சம்பவமானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இசுரு ஹேஷான் என்பவர் சுகயீனம் ஏற்பட்டதை தொடர்ந்து சமீபத்தில் கேகாலை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்படதன் பின்னர் இன்று பிற்பகல் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.