சஜித் பிரேமதாச புதையல் தேடியதன் காரணமாகவே ஐக்கிய தேசியக் கட்சி சீரழிந்து போனது என முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குருணாகல் மாவட்ட வேட்பாளருமான ஜயரத்ன ஹேரத் தெரிவித்துள்ளார்.
அப்படியானவர்களே தற்போது பிரதமர் பதவிக்கு வர வேண்டும் என்று கனவு காண்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குருணாகல் – மாவத்தகமை, வெவகெதர பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
ஒழுக்கமானவர்களை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்து அனுப்ப வேண்டிய கடமை மக்களுக்கு இருக்கின்றது.
கடந்த நல்லாட்சி அரசாங்கம் எம்மிடம் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பறித்துக் கொண்டது.
ஏற்பட்ட அரசியல் சூறாவளியில் நாங்கள் புதிய கட்சியை தொடங்கி, புதிய அரசியல் பயணத்தை ஆரம்பிக்க நேரிட்டது.
வலுவான நாடாளுமன்றத்தை ஜனாதிபதி அமைத்து கொடுக்க வேண்டிய சவால் எமக்குள்ளது.
சஜித் பிரேமதாச போன்ற மந்த புத்தியுள்ளவர்கள் அனைத்து அரசாங்கங்களிலும் இருப்பார்கள்.
மந்தபுத்தியுள்ளவர்கள் செய்யும் செயல்களுக்கு அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டியதில்லை எனவும் கூறியுள்ளார்.