பொது மக்களுக்கான ஒரு விஷேட செய்தி – தொலைபேசி இணைப்புகள் இரத்தாகும் அபாயம்

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யப்படாத நிறுவனங்களில் கொள்வனவு செய்யும் தொலைபேசிகளுக்கு தொலைபேசி இணைப்பு (சிம் கார்ட்) வழங்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 01ம் திகதி முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பு உபகரணங்களை வாங்கும் போது இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் கொள்வனவு செய்யுமாறு, பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது பயன்பாட்டில் உள்ள சிம் அட்டையுடன் இணைப்பிலுள்ள உபகரணங்களுக்கு இந்த தடை ஏற்படாதென தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையினுள் தொலைத்தொடர்பு உபகரணங்களை வாங்கும் போது இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் வர்த்தக அனுமதி பத்திரம் பெற்றுக் கொள்வது அவசியமாகும்.

தொலைத்தொடர்பு சட்டத்திற்கமைய இது சட்டத்தை மீறும் செயல் எனவும் இது தண்டனை வழங்கும் குற்றமாகும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் தொலைபெசிகளுக்கு சிம் அட்டைகளை பெறுவது என்பது சம்பந்தமாக பலர் கேள்வி எழுப்பியிருந்தனர்.

தனிப்பட்ட பயன்பாட்டுக்காக இவ்வாறு கொண்டு வரப்படும் தொலைபேசிகளை இணையத்தின் ஊடாக பதிவு செய்வதற்கு நடைமுறை ஒன்றை எதிர்வரும் நாட்களில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.