முன்னாள் பரீட்சைகள் ஆணையாளர் வாகனத்திற்குள் சடலமாக கண்டெடுப்பு

தமிழ் ​செய்திகள் இன்று


முன்னாள் பரீட்சைகள் ஆணையாளர் வாகனத்திற்குள் சடலமாக கண்டெடுப்பு

முன்னாள் பரீட்சை ஆணையாளர் நாயகம் மஹிந்த விஜேசிரி தனது வாகனத்திற்குள் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

ஹொரன- கெஸ்பேவ பிரதான வீதியில் அவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

மஹிந்த விஜேசிரி பொல்கஸ்பிட பிரதேசத்தில் வசிப்பவர் என்றும் மற்றும் மூன்று பிள்ளைகளின் தந்தை என்றும் பிலியந்தல பொலிஸார் தெரிவித்தனர்.

வாகனம் ஒரு வணிக நிறுவனத்திற்கு வெளியே அரை மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தப்பட்டிருந்ததால் சந்தேகத்தின் பேரில் வாகனம் பரிசோதிக்கப்பட்டுள்ள நிலையில், இவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

அவரது வசம் இருந்த தொலைபேசி மூலம் தகவல் கொடுத்த பின் உறவினர்கள் இறந்தவரை அடையாளம் கண்டுள்ளனர்.

விஜசிரி தனது மகளின் இல்லத்திலிருந்து தனது மனைவியை அழைத்துச் செல்வதற்காக நுகேகொடவுக்கு செல்லும்போது இறந்துவிட்டதாக முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.