மனைவியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக ஆசிரியர் ஒருவர் செய்து வந்த செயல்

தமிழ் ​செய்திகள் இன்று


மனைவியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக ஆசிரியர் ஒருவர் செய்து வந்த செயல்

மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவர் உட்பட மூன்று பேர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சீதுவையில் வைத்து நீர்கொழும்பு பொலிஸ் குற்றவியல் பிரிவினரால் இன்று (26) இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து 150 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் 6 கிலோ கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

முகத்துவாரம் பிரதேசத்தில் மேலதிக வகுப்பு நடாத்தி வரும் மட்டக்குளி பிரதேசத்தை சேர்ந்த கணித ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது மனைவிக்கு அதிசொகுசு கார் ஒன்றினை விலைக்கு வாங்குவதற்காக இந்த வியாபாரத்தில் ஈடுபட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் அவர் தெரிவித்துள்ளார்.

அவரிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களுக்கு அமைய மேலும் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, மூன்று தராசுகள் மற்றும் 4 கைப்பேசிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.