சட்டமா அதிபர் அதிரடி – ரிசாதை கைது செய்ய பணிப்புரை

தமிழ் ​செய்திகள் இன்று


சட்டமா அதிபர் அதிரடி – ரிசாதை கைது செய்ய பணிப்புரை

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை கைது செய்யவதற்கானப் பிடியாணை பெற்றுக்கொள்ளுமாறு சட்டமா அதிபர், பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பொதுமக்களின் பணத்தை தவறாகப் பயன்படுத்தியமை, தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டிலேயே அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் அரச பேருந்துகளைப் பயன்படுத்தி புத்தளத்தில் இருந்து இடம்பெயர்ந்த வாக்காளர்களை மன்னாருக்கு அழைத்துச் சென்றதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றன.

இதன்படி அவரை பொதுசொத்துக்களை முறைக்கேடாக பயன்படுத்தியமை மற்றும் தேர்தல் விதிகளை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ், பிடியாணையைப் பெற்று கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

ஆகவே உடனடியாக நீதிமன்றில் பிடியாணை பெற்று ரிஷாத் பதியுதீனை கைது செய்யுமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.