கொரோனா அச்சத்தால் 17 மில்லியன் மிங்க் விலங்குகளை கொல்ல திட்டம்

தமிழ் ​செய்திகள் இன்று


கொரோனா அச்சத்தால் 17 மில்லியன் மிங்க் விலங்குகளை கொல்ல திட்டம்

மனிதர்களுக்கு பரவக்கூடிய கொரோனா வைரஸின் பாதிப்பு மிங்க் விலங்கு பண்ணைகளில் கண்டறியப்பட்ட பின்னர் டென்மார்க்கில் 17 மில்லியன் மிங்க் விலங்குகளை அழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பரவல் எதிர்கால கொவிட் -19 தடுப்பூசியின் “செயல்திறனுக்கு ஆபத்தை” ஏற்படுத்துகிறது என அந்நாட்டு பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் தெரிவித்துள்ளார்.

விலையுயர்ந்த ரோமங்களுக்காக மிங்க் விலங்கு ஐரோப்பியா மற்றும் தெற்கு அமெரிக்கா ஆகிய நாடுகளில் அதிகளவில் வளர்க்கப்படுகின்றன. அதில் டென்மார்க் மிகப் பெரிய உற்பத்தியாளாராக உள்ளது.

இந்நிலையில், டென்மார்க்கில் மிங்க் விலங்குகளை அழிக்கும் செயற்பாடு விரைவில் நடைபெறும் என பொலிஸார் தெரிவித்தனர்.

டென்மார்க்கின் வடக்கு ஜட்லாண்ட் பிராந்தியத்திலும், ஐரோப்பாவின் பிற பகுதிகளிலும் உள்ள மிங்க் பண்ணைகளில் பல மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளன.

ஆனால் டென்மார்க்கில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகின்றன. மேலும் 5 புதிய வைரஸ் தொற்று மிங்க் பண்ணைகளில் இனங்காணப்பட்டுள்ளது.

இதனால் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரதமர் பிரடெரிக்சன் நிலைமை “மிகவும், மிகவும் தீவிரமானது” என விவரித்துள்ளார்.

இவ்வாறு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பண்ணைகளில் உள்ள மின்க்ஸ் விலங்குகள் கொல்லப்படவுள்ளன.

அரகான் மாகாணத்தில் உள்ள ஒரு பண்ணையில் கொரோனா தொற்றுக்கள் கண்டறியப்பட்ட பின்னர் ஜூலை மாதம் ஸ்பெயின் 100,000 மின்க் விலங்குகளை கொலை செய்யவுள்ளது.

மேலும் நெதர்லாந்தில் பல்லாயிரக்கணக்கான விலங்குகள் கொலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.