சிறுபான்மையினரின் மத உரிமைகளை பாதுகாக்க வேண்டும்

தமிழ் ​செய்திகள் இன்று


சிறுபான்மையினரின் மத உரிமைகளை பாதுகாக்க வேண்டும்

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் இறுதிக் கிரியைகள் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கியுள்ள பரிந்துரைகளை இலங்கையும் பின்பற்ற வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், “இலங்கையில் மத ரீதியான சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படவும் பாதுகாக்கப்படவும் வேண்டும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மன்னிப்பு சபையின் டுவிட்டர் பக்கத்தில் இந்த செய்தி வௌியிடப்பட்டுள்ளது.

இலங்கை அதிகாரிகள் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளை பின்பற்ற வேண்டும் என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று நாட்டில் உள்ள முஸ்லிம் தரப்பால் தொடர்ந்து கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்றமை கூறத்தக்கது.