கொவிட் 19 தடுப்பு இராஜாங்க அமைச்சர் நியமனம்

தமிழ் ​செய்திகள் இன்று


கொவிட் 19 தடுப்பு இராஜாங்க அமைச்சர் நியமனம்

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளேவிற்கு மேலும் ஒரு இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோய்கள் மற்றும் கொவிட் 19 தடுப்பு இராஜாங்க அமைச்சராக சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே நிநியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

2020 பொதுத் தேர்தலை அடுத்து சிறைச்சாலைகள் மற்றும் கைதிகளின் புனர்வாழ்வு அமைச்சராக பெர்னாண்டோபுல்லே நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது புதிய அமைச்சரவை அவர் பொறுப்பில் வந்துள்ளது.