கொரோனா நோயாளி செய்துள்ள மோசமான செயல்

தமிழ் ​செய்திகள் இன்று


கொரோனா நோயாளி செய்துள்ள மோசமான செயல்

அட்டுளுகம பிரதேசத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஒருவர் உங்களுக்கும் கொரோனாவை பரப்புவதாக கூறி சுகாதார பரிசோதகர்களை நோக்கி எச்சில் துப்பிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அத்துடன் ன் சுகாதார பரிசோதகர்களின் கடமைக்கு தடை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளியை சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல முயற்சித்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நோயாளியை சிகிச்சைக்காக அழைத்து செல்ல முயற்சித்த போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், பொது சுகாதார பரிசோதகர்களுடன் தகராறிலும் ஈடுபட்டுள்ளார்.

அத்துடன் பொது சுகாதார பரிசோதகர்கள் வருகை தந்திருந்த கெப் வண்டியின் கதவைத் திறந்து எச்சிலை உமிழ்ந்துள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பண்டாரகம பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

கடமைக்கு தடை ஏற்படுத்தியமை மற்றும் சிகிச்சைக்கு செல்வதை நிராகரித்தமை ஆகியவை நாட்டிற்கு செய்யும் துரோக செயல் என தண்டனை வழங்க முடியும் என பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

அட்டுளுகம பிரதேசத்தில் இதுவரை 327 கொரோனா தொ தொற்றாளர்கள் பதிவாகியுள்ளமை கூறத்தக்கது.