இராணுவத் தளபதியின் விஷேட அறிவிப்பு

தமிழ் ​செய்திகள் இன்று


இராணுவத் தளபதியின் விஷேட அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை பிறப்பிப்பது குறித்த எத்தகைய தீர்மானமும் இதுவரை எடுக்கப்படவில்லையென, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பிலோ அல்லது மேல்மாகாணத்திலோ கிறிஸ்மஸ் வார இறுதியில் தனிமைப்படுதல் ஊரடங்கினை அறிவிக்கப்போவதில்லை என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

இன்று நள்ளிரவு முதல் நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு அமுலாகுமென நேற்று வாட்ஸ்அப் ஊடாக போலியான செய்தி வெளியானதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இவ்வாறு தவறான செய்தியை வெளியிட்டோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென, இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள் கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள வேளை சில தனிநபர்கள் மக்கள் மத்தியில் பதற்றத்தை தூண்ட முயல்கின்றனர் என குற்றம்சாட்டியுள்ளார்.

அனைத்தும் பொதுமக்களின் நடவடிக்கைகளிலேயே தங்கியுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர், எங்கள் அதிகாரிகள் எச்சரிக்கையுடன் இருப்பார்கள். தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள். ஆனால் பொதுமக்களின் ஆதரவு தேவை எனவும் தெரிவித்துள்ளார்.