இறக்குமதி செய்யப்படும் ஆடைகளுக்கு நடக்கப் போவது

தமிழ் ​செய்திகள் இன்று


இறக்குமதி செய்யப்படும் ஆடைகளுக்கு நடக்கப் போவது

எதிர்வரும் வருடம் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி தொடக்கம் இறக்குமதி தைத்த ஆடைகளுக்கு வரியொன்றை அறிவிட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

உள்நாட்டு தைத்த ஆடை உற்பத்தியை பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

´ஏப்ரல் மாதம் முதலாம் திகதி தொடக்கம் இலங்கைக்கு வௌிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தைத்த ஆடைகளுக்கு விசேட வரியொன்றை அறிமுகப்படுத்த நாம் எதிர்ப்பார்த்துள்ளோம்.

உள்நாட்டு தைத்த ஆடை வர்த்தகர்களை பாதுகாப்பதே இதன் நோக்கமாகும். குறைந்த தரத்தினை கொண்ட தைத்த ஆடை இறக்குமதியை முற்றாக நிறுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

200 ரூபாவில் இருந்து 450 ரூபா வரை அதிகரிக்கும் வகையான வரி முறையொன்றை எதிர்ப்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்´.