ஜனாஸா எரிப்பை எதிர்க்கின்றது ஜம்மியதுல் உலமா

நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஜனாஸா எரிப்பு விடயம் சம்பந்தமாக இதுவரை மௌனம் காத்து வந்த அகில இலங்கை ஜம்மியதுல் உலமா தனது எதிர்ப்பை இன்று வௌியிட்டுள்ளது.

தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தமது எதிர்ப்பை வௌியிட்டுள்ளது.

“அடக்கம் செய்வதன் மூலம் எவ்வித தீய விளைவுகளும் இல்லை என்பதற்கு பல அறிவியல் சான்றுகள் இருப்பதால் கொவிட்-19 காரணமாக இறந்தவர்களை அடக்கம் செய்யும் உரிமையை நாட்டு மக்களுக்கு அவசரமாக பெற்றுத் தருமாறு அதிகாரிகளை கேட்டுக் கொள்கின்றோம்.

நல்லடக்கம் என்பது எமது அடிப்படை மற்றும் மத உரிமையாகும்” இவ்வாறு அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You may also like...