காதலனை நம்பி சென்ற அப்பாவிப் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்

இளம் பெண் ஒருவரை கொடூரமாக கொலை செய்த இளைஞர் தொடர்பான செய்திகள் வெளியாகி அதிர வைத்துள்ளது.

இந்தியாவை சேர்ந்த சினேகலதா என்ற பெண் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு தனியார் வங்கி ஒன்றில் பணிக்கு சேர்ந்தார். தினமும் 6 மணிக்கு வீட்டுக்கு வந்து விடும் தங்கள் மகள் வீட்டுக்கு வராததால் அவரது மகளுக்கு அழைப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

மொபைல் சுவிட்ச் ஆப் செய்யப் பட்டிருந்தது, இதனை தொடந்து உறவினர்கள் நண்பர்கள் என அனைவரும் தேடியும் சினேகாவை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனை தொடர்ந்து பொலீஸில் புகார் அளித்துள்ளனர், புகாரை ஏற்ற பொலீஸார் மொபைல் சிக்னல் ஆப் ஆன இடத்தை வைத்து சினேகாவை தேடி சென்ற போது பாதி எரிந்த நிலையில் சினேகாவின் சடலம் மீட்கப் பட்டது,

இதை தொடர்ந்து பொலீஸார் நடத்திய விசாரணையில் சினேகா கொத்தனாராக வேலை பார்க்கும் ராஜூ என்ற இளைஞரை காதலித்து வந்தது தெரிய வந்தது.

பொலீஸார் ராஜுவிடம் நடத்திய விசாரணையில் சினேகலேவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். ராஜு கொடுத்த வாக்குமூலத்தில் 4 வருடமாக காதலித்து வருகிறோம்.

கடந்த 3வாரமாக என்னுடன் சரியாக பேசவில்லை, நான் கால் செய்யும் போது போனை தூக்கவில்லை, இதனால் கோபத்தில் இருந்தேன்,

அப்போது தான் வங்கியில் பணிபுரியும் பிரவீன் என்பவரை காதலிப்பதாக அறிந்தேன், வேலை முடித்து வரும் போது பேச வேண்டும் என கூப்பிட்டேன் வந்தாள்.

பைக்கில் அழைத்து வந்து தலையில் அடித்து கொலை செய்து எரித்து விட்டேன் என கூறியுள்ளார்.

பிரவீனிடம் நடத்திய விசாரணையில் வங்கியில் பணி புரியும் சக பெண் என்பதால் மட்டுமே பேசினேன் என்றும் தனது காதலியும் அதே வங்கியில் பணி புரிவதாகவும் தெரிவித்துள்ளார்.

பணி நிமித்தம் அதிகம் பேச முடியாமல் இருந்த சினேகாவை சந்தேக புத்தியால் ராஜு அடித்து கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.!!

You may also like...