சுனாமி ஏற்பட்டு 16 வருடங்களின் பின் 300 பேர் தொடர்பில் வௌியான தகவல்

கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி ஏற்பட்ட சுனாமிப் பேரலைக்கு இன்றுடன் 16 வருடங்கள் நிறைவடைந்துள்ளன.

இந்நிலையில் கொவிட்-19 பரவலுக்கு மத்தியில் இந்த முறை சமய நிகழ்வுகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு உயிரிழந்தவர்கள் நினைவு கூறப்பட்டனர்.

அத்துடன் சுனாமி பேரலையால் உயிரிழந்த மக்களை நினைவு கூர்ந்து இன்று முற்பகல் 9.25 முதல் 9.27 வரை இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு மற்று மலையகம் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளிலும், ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் சுமத்திரா தீவில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட ஆழிப்பேரலை ஆசிய நாடுகளில் வரலாறு காணாத அழிவை ஏற்படுத்தியது.

ரிக்டர் அளவுகோளில் 9.1 முதல் 9.3 மெக்னிடீயூட்டாக அந்த நில அதிர்வு பதிவாகியிருந்தது.

இதன் காரணமாக இந்து சமுத்திர பிராந்தியத்தில் சுமார் 100 அடி உயர்த்திற்கு ஆழிப்பேரலை உருவாகியது.

இலங்கை, இந்தியா, மலேசியா, மியன்மார், அந்தமான், தாய்லாந்து உள்ளிட்ட 14 ஆசிய நாடுகளின் கரையோரங்களை இந்த ஆழிப்பேரலை சூரையாடிச் சென்றது.

இலங்கையின் கரையோர பகுதிகள் பெரும் பாதிப்படைந்ததுடன், பல உயிர்களையும் இலங்கையில் பலியெடுத்தது.

இதேவேளை, 16 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையிலும், ஆழிப்பேரலை அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களில் 300க்கும் அதிகமான சரீரங்கள் இன்னும் அடையாளங் காணப்படாதுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காலி கராபிட்டி போதனா மருத்துவமனையின் பிரதான வைத்திய அதிகாரி ரொஹான் பீ.ருவன்புர தெரிவித்துள்ளார்.

அந்த சடலங்களை அடையாளங் காண அவர்களது உறவினர்கள் எவரும் இதுவரை முன்வரவில்லை என வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த சடலங்கள் கராப்பிட்டி போதனா வைத்தியசாலையின் மருத்துவ பீடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக பிரதான வைத்திய அதிகாரி ரொஹான் பீ.ருவன்புர தெரிவித்துள்ளார்.

You may also like...