ஜனாஸாவை எரிப்பதால் சுவனம் செல்ல தடையாகாது – மேர்வில் சில்வா

கொரோனா ​லைரஸ் தொற்று காரணமாக உயிரிழப்பவர்களை தகனம் செய்வதால் அவர்கள் சுவர்க்கத்திற்கு செல்ல தடையாக இருக்காது என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கூறியுள்ளார்.

ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

முஸ்லிம் மக்களின் கோரிக்கை நியாயமானது என்றும் அவர’ சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் கொரோனா விடயத்தில் முஸ்லிம் மக்கள் சுகாதார பிரிவினரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய நடந்துகொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

இந்த விடயத்தில் மகா சங்கத்தினருடனோ அல்லது பௌத்த மக்களுனடோ முரண்பட்டுக்கொள்ள தேவையில்லை எனவும், அரசாங்கம் மற்றும் சுகாதார பிரிவுடன் பேசி இந்த பிரச்சினையை தீர்த்துக்கொள்ளுமாறு மேர்வின் சில்வா கூறியுள்ளார்.

You may also like...