அடக்கம் செய்ய அனுமதி வழங்குமாறு கூறி ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்குமாறு கூறி அமரபுர மற்றும் ராமான்ய நிக்காய பீட தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

இன்று மாலை இந்த விசேட கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இறந்தவர்களை அடக்கம் செய்வது இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவர்களின் மத வழமை என்றும், அதன்காரணமாக அந்த மத உரிமையை வழங்குமாறும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்பவர்களை சகட்டுப்பாடுகளுடன் அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுப்பாடுகள் மக்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், இஸ்லாமிய, கிறிஸ்துவ மக்களின் மத சடங்கை நிறைவேற்றக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 21,000 பௌத்த தேரர்களை இந்த நிக்காயா உறுப்பினர்களாக கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You may also like...