நிலவில் நிலம் வாங்கி மனைவிக்கு பரிசளித்த கணவன்

தமிழ் ​செய்திகள் இன்று


நிலவில் நிலம் வாங்கி மனைவிக்கு பரிசளித்த கணவன்

ராஜஸ்தானை சேர்ந்த நபர் ஒருவர், திருமண நாள் பரிசாக தனது மனைவிக்கு நிலவில் 3 ஏக்கர் நிலம் வாங்கி கொடுத்துள்ளார்.

தர்மேந்திர அனிஜா என்ற நபர் திருமண நாளுக்கு தனது மனைவிக்கு வித்தியாசமான பரிசு கொடுக்க நினைத்துள்ளார். மற்றவர்களை போல் கார், நகை என பரிசளிப்பதை அவர் விரும்பவில்லை.

அதனால் நிலவில் நிலம் வாங்க முடிவெடுத்துள்ளார். இதற்காக Luna society international என்ற நிறுவனம் மூலம் நிலவில் 3 ஏக்கர் நிலம் வாங்கி மனைவிக்கு கொடுத்துள்ளார்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத மனைவி மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துள்ளார். இந்த நிலம் வாங்கியது தொடர்பாக அந்நிறுவனம் சார்பில் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்த தம்பதியர் தெரிவித்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் நிலவில் நிலம் வாங்கிய முதல் நபர் நான் தான் என்று தர்மேந்திர அனிஜா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக, பீகாரை சேர்ந்த நீரஜ் குமார் என்பவர் தனது பிறந்தநாளுக்காக நிலவில் 1 ஏக்கர் நிலம் வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.