உடல்களை அடக்கம் செய்ய ஒருபோதும் இடமளிக்கக் கூடாது

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய ஒருபோதும் இடமளிக்கக் கூடாது.

உடல்கள் தகனம் செய்வதற்கு எதிராக முன்னெடுக்கும் போராட்டங்களை அரசாங்கம் தடை செய்ய வேண்டும் என தேசப்பற்று தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பெங்கமுவே நாலக தேரர் தெரிவித்தார்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடலை தகனம் செய்வதற்கு எதிராக முஸ்லிம் சமூகத்தினரால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (28) தேரர்கள் ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடலை தகனம் செய்யும் தீர்மானம் தற்போது அரசியல் மயப்படுத்தப்பட்டு விட்டது. நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக ஒரு தரப்பினர் செயற்படும்போது ஒரு நாடு – ஒரு சட்டம் என்ற கொள்கை எவ்வகையில் செயற்படுத்தப்படும் என்பதற்கு அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை அரசியலாக்க வேண்டாம். அடிப்படைவாதிகளின் குறுகிய நோக்கத்துக்கு பாரம்பரிய முஸ்லிம்கள் அகப்பட வேண்டாம்.

உடல்களை தகனம் செய்யும் தீர்மானத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டங்களை முதலில் தடை செய்ய வேண்டும்.

இந்த பிரச்சினைக்கு அரசாங்கம் உறுதியான தீர்மானத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும். பௌத்த மக்கள் பொறுமையுடன் உள்ளார்கள். ஆகவே அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.

You may also like...