கேகாலை தம்மிகவின் பாணியை அருந்திவருக்கு கொரோனா

கேகாலை வைத்தியர் தம்மிக்க பண்டார தயாரித்ததாக கூறப்படும் கொரோனா தடுப்பு பானத்தை அருந்திய ஒருவர் கொரோனா தடுப்பு பானத்தை பருகிய ஒருவர் வைரசிற்கு இலக்காகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வரக்காப்பொல பொது சுகாதார அதிகாரி ஹேமந்த குமார தெரிவித்தார்.

இவ்வாறு பாதிப்பிற்கு உள்ளாகிய நபர் ஒத்னம்பிட்டிய பகுதியை சேர்ந்தவர் எனவும் அங்கு இவருடன் சேர்த்து 12 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாகவும் பொதுசுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

இதேவேளை குறித்த பானத்தை வாங்குவதற்காக கேகாலையில் உள்ள மருத்துவரின் வீட்டிற்கு முன்னால் நாளாந்தம் பெருமளவு மக்கள் ஒன்று கூடி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

You may also like...