தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

கடந்த வாரத்தில் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில், இந்த வாரத்தின் தொடக்கத்தில் சற்று விலை குறைவடைந்துள்ளது.

கொழும்பு, புறக்கோட்டை சந்தை நிலவரப்படி இன்றைய தினம் 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை 105,000 ரூபாய் ஆக காணப்படுகின்றது.

அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை 96200 ரூபாய் ஆக காணப்படுகின்றது.

கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இம்மாதம் 3000 ரூபாய் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை 108,000 ரூபாய் ஆக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும் தொடர்ந்து தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்படலாம் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

You may also like...