அடக்கமா? தகனமா? இராணுவத் தளபதி கூறியுள்ள செய்தி

கொரோனா வைரஸ் தொற்றால் மரணிக்கும் நபர்களின் உடல்கள் சம்பந்தமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் தீர்மானத்திற்கு அனைத்து தரப்பினரும் இணங்க வேண்டும் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அந்த நிபுணர்கள் குழு வழங்கிய பரிந்துரைக்கு அமைய செயற்பட வேண்டியது அனைத்து பிரஜைகளினதும் கடமை எனவும் அவர் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழக்கும் நபர்களின் உடல்களை தகனம் செய்ய வேண்டும் என அந்த நிபுணர்கள் குழு பரிந்துரைத்திருந்தது.

எனினும் கொரோனாவால் இறக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என முஸ்லிம்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கொரோனா தொற்றால் இறந்தவர்களின் பெரும்பான்மையானவர்கள் முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 194 ஆக அதிகரித்துள்ளது.

 

You may also like...