புதிய முஸ்லிம் அடிப்படைவாத அமைப்பு?

தமிழ் ​செய்திகள் இன்று


புதிய முஸ்லிம் அடிப்படைவாத அமைப்பு?

கிழக்கு மாகாணத்தை அடிப்படையாக கொண்டு புதிய முஸ்லிம் அடிப்படைவாத அமைப்பு உருவாகியுள்ளது என புலனாய்வுப் பிரிவினர் அறிக்கையிட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக அந்த அமைப்பு குறித்து விரிவான விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது.

முஸ்லிம் சமயத்தை அழிக்க எதிர்காலத்தில் உருவாக உள்ளதாக கூறப்படும் தலைவருக்கு எதிராக தற்போது இருந்தே முஸ்லிம் மக்களை தெளிவுப்படுத்துவது இந்த அமைப்பின் நோக்கம் என தெரியவந்துள்ளது.

இந்த அமைப்பின் தலைவராக மருத்துவர் ஒருவர் செயற்பட்டு வருவதாகவும் அமைப்பில் 30 பேர் உறுப்பினர்களாக இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இணையத்தளம் ஊடாக இந்த புதிய அமைப்பின் செயற்பட்டாளர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த சிங்கள இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த அமைப்பை நடத்தி செல்ல மத்திய கிழக்கு நாடொன்றில் இருந்து நிதி வழங்கப்படுவதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக குறித்த சிங்கள இணையத்தளம் மேலும் தெரிவித்துள்ளது.