மாவனல்லையில் புத்தர் சிலை மீது தாக்குதல் – STF பாதுகாப்பு

தமிழ் ​செய்திகள் இன்று


மாவனல்லையில் புத்தர் சிலை மீது தாக்குதல் – STF பாதுகாப்பு

மாவனல்லை நகரம் மற்றும் ஹிங்குல பிரதேசத்தில் பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

மாவனல்லை, ஹிங்குல பிரதேசத்தில் தெடிமுண்ட விகாரைக்கு முன்னால் உள்ள புத்தர் சிலை மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அதன் கண்ணாடிக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹிங்குல பிரதேசத்தில் தெடிமுண்ட விகாரைக்கு முன்னால் உள்ள புத்தர் சிலைக்கு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்துள்ள முறைப்பாட்டின் படி இவ்வாறு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஏற்கனவே மாவனல்ல மொல்லிக்கொட பிரதேசத்தில் கற்குவாரியில் இருந்த வெடிபொருள் திடீரென காணாமற்போன விவகாரம் பற்றி குற்றப்புலனாய்வு பிரிவின் 5 சிறப்பு குழுக்கள் விசாரணையை ஆரம்பித்துள்ளன.

இந்நிலையில் குறித்த கற்குவாரிக்கு சிறப்பு விசாரணைப் படை விஜயம் செய்துள்ளதாக தெரியவருகின்றது.

இந்த வெடிபொருளை எவராவது பெற்றிருப்பின் என்ன நோக்கத்திற்காக அவற்றை பெற்றிருப்பார்கள் என பல்வேறு கோணத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.